Drug trafficking arrests : தமிழ்நாடு முழுக்க போதைப் பொருள் தடுப்பு அதிரடி நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Drug trafficking arrests : தமிழ்நாடு முழுக்க போதைப் பொருள் தடுப்பு அதிரடி நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: June 14, 2026 at 12:29 pm
சென்னை, ஜூன் 14, 2026: தமிழ்நாடு காவல்துறை மாநிலம் முழுவதும் நடத்திய தீவிர அமலாக்க நடவடிக்கையில், போதைப்பொருள் விற்பனை, பதுக்கல், கடத்தல் போன்றவற்றில் தொடர்புடைய 202 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே 28 முதல் ஜூன் 10 வரை நடைபெற்ற இந்த நடவடிக்கைகளில், சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் மீது தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 36,740 ரவுடிகள் சோதனை செய்யப்பட்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,328 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 1 முதல் 10 வரை, 2,939 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டன. தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, 231 கிலோ கஞ்சா, 4,073 போதை மாத்திரைகள், 22.55 கிராம் மெத்தாம்பெட்டமின், 0.006 கிராம் எம்.டி.எம்.ஏ, 362.5 கிலோ குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள் குற்றங்களில் தொடர்புடைய 202 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். மேலும், 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 14 இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.
சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகள், தொடர் குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கு மேம்பட்டதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இன்னும் 15 வருஷம்தான்.. இந்தியாவை வழி நடத்துவார் விஜய்.. விஜயதரணி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com