Durai Vaiko statement : “மதிமுக பொதுக்குழுவில் தான் எங்களுடைய முடிவு எடுக்கப்படும்” என்று துரை வைகோ எம்.பி. கூறியுள்ளார்.
Durai Vaiko statement : “மதிமுக பொதுக்குழுவில் தான் எங்களுடைய முடிவு எடுக்கப்படும்” என்று துரை வைகோ எம்.பி. கூறியுள்ளார்.

Published on: June 13, 2026 at 7:20 pm
மதுரை, ஜூன் 13, 2026: திருச்சி மக்களவை தொகுதி எம்.பி. துரை வைகோ, ரயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். இடதுசாரி இயக்கங்கள் திமுக கூட்டணியில் இல்லை என தெரிவித்துள்ள நிலையில், அதற்கு திமுக தலைமை தான் பதில் சொல்ல வேண்டும் என்றும், மதிமுக பொதுக்குழுவில் தான் எங்களுடைய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விஜய்யின் வருகையால் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் சிறிய பாதிப்பு இருக்கும் என நினைத்தோம். ஆனால் மக்களிடம் மௌனப் புரட்சி நடந்துள்ளது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்கள் தோல்விக்கு காரணம் என்ன என்பதை சுயபரிசோதனை செய்து, மக்களை புறந்தள்ளாமல் உரிய ஆய்வை செய்ய வேண்டும் என வைகோ வலியுறுத்தினார். கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய மதிமுக உறுப்பினர்கள் கூட தோல்வியை சந்தித்துள்ளனர். 1967-இல் நடந்ததைப் போலவே இப்போது சாதி, மத, பண அரசியலைக் கடந்து மக்கள் மௌனப் புரட்சி செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டம் என கூறியதை வைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அடிப்படை ஜனநாயகத்தின்படி கூட்டணி கட்சிகள் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அவ்வாறு கூறியதாகவும் விளக்கம் அளித்தார். திமுக சொல்லும்போது கூட்டணியில் இருந்து வெளியேறியிருந்தால், அதையும் தவறாகவே பேசப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.
மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில் நீண்ட காலமாக பல பிரச்சனைகள் உள்ளன. இந்த பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய முடியாது என்றாலும், தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தினார். அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு 20 வருடங்களுக்கு மேலாக மின்சாரத் துறையில் சீர்திருத்தம் செய்யாததே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மாம்பழ கூழ் தொழிற்சாலை.. எங்கு அமைகிறது? அமைச்சர் பேட்டி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com