Srivaikundam Shock: சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
Srivaikundam Shock: சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Published on: June 11, 2026 at 6:20 pm
சென்னை, ஜூன் 11, 2026: அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) விடுத்துள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில், முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரம், தவெக எம்.எல்.ஏ சரவணன் ஆதரவில் நடைபெற்றதாகவும், சம்பவத்தை மறைக்க எம்.எல்.ஏ சரவணனே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம், ஆளுங்கட்சியின் சட்டம்-ஒழுங்கு நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது. பாதிக்கப்பட்ட பெண், வேறொரு பெண்ணுக்கும் இதே போன்ற வன்கொடுமை நடந்ததாகக் கூறியிருப்பது, குற்றச்சாட்டின் தீவிரத்தைக் காட்டுகிறது. “அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்ற பேச்சுகள், அரசியல் இடையூறு இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டை எந்த அரசியல் இடையூறும் இன்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்லாமல், குற்றத்திற்கு துணை போனோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தி.மு.க. உடன் கூட்டணி இல்லை… இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com