இந்து விரோத அரசியல்.. த.வெ.க.வை சாடிய நயினார் நாகேந்திரன்!

Nainar Nagendran : தமிழக வெற்றிக் கழகம் இந்து விரோத அரசியலில் ஈடுபடுவதாக தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

Published on: June 6, 2026 at 4:18 pm

சென்னை, ஜூன் 6, 2026: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அமைச்சர் சி.டி. நிர்மல் குமாரின், திருப்பரங்குன்றம் தொடர்பான கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில், உயர்நீதிமன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தபோதும், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையையே கடைபிடிப்போம்” என்று தவெக அமைச்சர் கூறியிருப்பது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாகவும், தீர்ப்பை அவமதிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, மாற்று சக்தி என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, திமுகவின் இந்து விரோத அரசியலைப் பின்பற்றுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இதனால் தவெக ஒரு ஏமாற்று சக்தி என்பதை மக்கள் உணர்ந்துவிட்டதாகவும், இந்து மக்களின் பண்பாட்டு உரிமையை பறிக்க முயலும் அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், திமுகவுக்கும் தவெகக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது என்று அவர் கூறினார். பாஜகவிடம் தங்களின் காங்கிரஸ் எதிர்ப்பை நிரூபிக்க திமுகவுடன் மறைமுகமாக பேரம் நடத்துவதாகவும், அதே பாதையில் தவெகவும் செல்கிறது என அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் வழக்கம்போல் மௌனமாக இருக்காமல், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது குறித்த தவெக அரசின் நிலைப்பாட்டை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : தமிழகத்தின் எதிர்கால பயணம்.. 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. அண்ணாமலை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com