Annamalai: கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Annamalai: கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Published on: June 6, 2026 at 2:11 pm
சென்னை, ஜூன் 6, 2026: அண்ணாமலை தொடங்கிய “We The Leaders” இயக்கத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 லட்சம் பேர் இயக்கத்தில் இணைந்துள்ளனர். இதனால், இயக்கத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை தனது ட்வீட்டில், “இந்த பேராதரவு எனக்கு பெரும் நெகிழ்ச்சியையும் அதைவிட பெரிய பொறுப்பையும் அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இது தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் மக்களின் கூட்டுப் பயணம் என அவர் வலியுறுத்தினார்.
இயக்கத்தில் இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்த அண்ணாமலை, “மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது” என்று கூறினார். மக்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம் என அவர் உறுதியளித்தார்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக இந்த இயக்கம் முன்னெடுக்கப்படுவதாகவும், மக்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இந்த பெரும் ஆதரவு, தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்திற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க : ₹1,020 கோடி முறைகேடு.. சிக்கலில் கே.என்.நேரு.. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com