Shreyas Iyer : இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Shreyas Iyer : இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: June 5, 2026 at 9:46 pm
புதுடெல்லி, ஜுன் 5, 2026; இந்திய அணியின் புதிய டி-20 கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யர் அறிவிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அய்யர் தலைமையிலான இந்திய அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கேப்டன் மாற்றம்
சூர்யகுமார் யாதவ், கடந்த 18 மாதங்களில் மோசமான பேட்டிங் நிலை காரணமாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 31 வயதான ஷ்ரேயஸ் அய்யர் இந்தியாவின் புதிய டி-20 கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அய்யர், ஐ.பி.எல்.-இல் மூன்று வெவ்வேறு அணிகளை, டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் என இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற அனுபவம் கொண்டவர் ஆவார்.
இங்கிலாந்து சுற்றுப் பயணம்
இந்திய அணி ஜூன் 26, 28 அன்று அயர்லாந்தில் இரண்டு டி-20 போட்டிகளையும், ஜூலை 1 முதல் இங்கிலாந்தில் ஐந்து டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளையும் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் அய்யரின் முதல் கேப்டன் பொறுப்பாகும்.
மற்ற வீரர்கள்
அணியின் துணை கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 15 வயது வைப்பவ் சூர்யவன்ஷி தனது முதல் இந்திய அணிக்கான அழைப்பை பெறுகிறார். இது இந்திய அணியின் எதிர்காலத்தை நோக்கி பி.சி.சி.ஐ எடுத்து வரும் முக்கியமான முடிவாகும்.
இதையும் படிங்க : இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி? சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com