அண்ணையா, எஸ்.பி பாலசுப்பிரமணியம்.. கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பதிவு!

Kamal Haasan’s Tribute to SPB : மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை
அன்னையா என கூப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

Published on: June 4, 2026 at 5:54 pm

சென்னை, ஜூன் 4, 2026: மறைந்த பாடகரும், நடிகரும், இசையமைப்பாளருமான எஸ்.பி பாலசுப்பிரமணியத்தை நினைவு கூர்ந்து பிறந்த நாள் அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன், “என் கரம் பற்றிய விரல், என் இசைக்கான குரல் அன்னையா எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் வாழ்க, குரலாக” எனப் பதிவிட்டுள்ளார்.

அதாவது, நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் எக்ஸ் தளப் பதிவில், “என் கரம் பற்றிய விரல், என் இசைக்கான குரல் அன்னையா எஸ்.பி. பாலசுப்ரமண்யம் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் வாழ்க, குரலாக” என்று உணர்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இந்திய இசைத்துறையில் மறக்க முடியாத குரலாக திகழ்ந்தவர். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தனது குரலை பரவலாகப் பரப்பினார்.

கமல்ஹாசன் மற்றும் எஸ்.பி.பி. இடையே நீண்டகால நட்பு இருந்தது. கமலின் பல படங்களில் எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தக் குரல், கமலின் நடிப்புடன் இணைந்து, பல தலைமுறைகளின் மனதில் நிலைத்திருக்கிறது.

இன்று அவரது பிறந்த நாளை நினைவுகூரும் கமல்ஹாசனின் பதிவு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எஸ்.பி.பி. அவர்களின் குரல் என்றும் வாழும், என்றும் இசை உலகில் ஒலிக்கும் என்ற உணர்வை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : கன்னத்தில் முத்தமிட்ட மாதவன்.. மனைவி பகிர்ந்த காதல் படங்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com