Anbumani Ramadoss : “125 நாள் வேலை திட்டத்தில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது; இதனை தமிழ்நாடு அரசு ஏற்க கூடாது” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss : “125 நாள் வேலை திட்டத்தில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது; இதனை தமிழ்நாடு அரசு ஏற்க கூடாது” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: June 4, 2026 at 12:02 pm
சென்னை, ஜூன் 4, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “125 நாள் வேலை திட்டத்தில், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது” என சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் மேலும், “மத்திய அரசால் அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 125 நாள் வேலை உத்தரவாதத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவு ரூ.3,923 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது பெரும் அநீதியாகும். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையிலான இந்த முடிவை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “125 நாள் வேலைத் திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு வெறும் 4.09% மட்டும் தான். கடந்த காலங்களில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் 10%க்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது அதை 4.09% ஆக குறைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி, 125 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு இத்திட்டத்தில் வேலை கேட்டு பதிவு செய்துள்ள மக்களுக்கு ஆண்டுக்கு 12 நாள்கள் கூட வேலை வழங்க முடியாது. ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதாகக் கூறிக் கொண்டு அதில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான நாள்கள் மட்டுமே வேலை வழங்கும் வகையில் நிதி ஒதுக்குவது நியாயமாக இருக்காது.
மாநில உரிமைகளுக்கு எதிராக இந்த நிதி ஒதுக்கீட்டு முறையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இதற்கு பதிலாக தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யும் பழைய முறையையே தொடர வேண்டும் என்றும், திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் குறைந்தது 10 விழுக்காட்டை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்; வெற்றி பெற வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்க.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com