மராட்டியத்தில் ரூ.2 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி.. சுட்டிக்காட்டிய த.மு.ம.க!

Crop Loan Waiver : மராட்டியத்தில் ரூ.2 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published on: June 4, 2026 at 11:53 am

Updated on: June 4, 2026 at 1:00 pm

சென்னை, ஜூன் 4, 2026: தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயம் என்பது நாட்டின் முதுகெலும்பாகும். இயற்கை பேரிடர்கள், வறட்சி, வெள்ளம், விளைபொருட்களின் விலை வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் காரணமாக பல விவசாயிகள் தமிழ்நாட்டில் கடன் சுமையில் சிக்கியுள்ளனர்.

இதனால், சிறு குறு விவசாயிகள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயக் கடன்களை முழுமையாக அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்வது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழக அரசு சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி எனவும் அதற்கு மேம்பட்ட கடன்கள் குறைந்த அளவிலேயே தள்ளுபடி எனவும் பிற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை என்று அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “நிதி பற்றாகுறை, இந்திய ரிசர்வ் வங்கி கட்டுபாடு என்று கூறுவதை விட்டு விட்டு எப்படி மகாராஷ்டிராவில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யபட்டுள்ளதை தமிழக அரசு பார்த்திட வேண்டும். அதே அடிப்படையில் தமிழக விவசாயிகளுக்கு தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுள்ளவாறு விவசாயிகளுக்கு பயிர்கடன் முழுமையாக ரத்து செய்திட தமிழக அரசு முன்வரவேண்டும் என தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வலியுறுத்துகிறது“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : குஜராத்தில் அமைக்க வேண்டியது தானே? வைகோ பரபரப்பு அறிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com