புதுடெல்லி, ஜுன் 1 2026: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ. 24 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
விலை உயர்வைத் தொடர்ந்து, டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டர் ரூ.1,747.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,851.50-க்கும், மும்பையில் ரூ.1,699-க்கும், சென்னையில் ரூ.1,906-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வணிக சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தற்போதைய உயர்வு சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஹோட்டல்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பிற சிறு வணிக நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இதனால் சிலிண்டர் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: ஒரே நாளில் ரூ.1,040 சரிந்த தங்கம் விலை… இன்று எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்