திருநெல்வேலியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்.. 17 வயதான சிறுமி மீட்பு!

Tirunelveli Child Marriage Foiled: திருநெல்வேலியில் 17 வயது சிறுமியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Published on: June 1, 2026 at 11:26 am

திருநெல்வேலி, ஜுன் 1, 2026 : திருநெல்வேலியில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். சிறுமியின் உறவினர்கள் இருவரை கைது செய்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி, தனது உறவினருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தார். இன்று திருமண மண்டபத்தில் விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குழந்தை திருமணம் நடக்கவிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததும், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ஆவணங்களை ஆய்வு செய்தபோது, மணப்பெண் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பதும், 17 வயது மட்டுமே என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் திருமணம் சட்டப்படி செல்லாது என போலீசார் அறிவித்தனர்.

இதையடுத்து, 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்குத் திருமணம் நடத்துவது குற்றம் என போலீசார் எச்சரித்தனர். கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, சீவலப்பேரியைச் சேர்ந்த முருகன் (32), வேல்முருகன் (46) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

சிறுமிக்கு பாதுகாப்பு

திருமணம் தடுக்கப்பட்ட பிறகு, சிறுமியை பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பெற்று வீட்டிற்கு அனுப்பினர்.

இதையும் படிங்க : அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறாரா? பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com