Minister Vignesh : டாஸ்மாக் துறையை கண்ணியமான துறையாக மாற்றுவோம் என அமைச்சர் விக்னேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Minister Vignesh : டாஸ்மாக் துறையை கண்ணியமான துறையாக மாற்றுவோம் என அமைச்சர் விக்னேஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Published on: May 30, 2026 at 10:58 pm
கோயம்புத்தூர், மே 30, 2026: கோயம்புத்தூரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷை நேரில் சந்தித்து, டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அப்போது ஊழியர்களிடம் பேசிய அமைச்சர், “டாஸ்மாக் துறையை ஏளனமாக பார்க்கும் நிலையை மாற்ற வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் உருவாக்கப்பட்டது; வருவாய் மட்டுமே நோக்கம் அல்ல” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும், “23 ஆண்டுகளாக டாஸ்மாக் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. பாட்டிலுக்கு ரூபாய் 10 வசூலிக்கும் முறையை ஒழிக்க வேண்டும். முதலமைச்சர் கூறியபடி தவறுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களுக்கு படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கப்படும்” என உறுதியளித்தார்.
“மதுவிற்கு அடிமையானது போல, நமது ஆட்கள் சில விஷயங்களுக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களையும் மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது நிச்சயம் நடக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் விக்னேஷ், “கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல, டாஸ்மாக் துறையை ஒரு கண்ணியமான துறையாக மாற்றுவோம். சக தொழிலாளர்கள் மதிக்கும் வகையில் செயல்படுத்துவோம்” என வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் டாஸ்மாக் நிறுவனத்தின் மண்டல மேலாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மெட்ரோ பயணம்.. எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com