Peddi ticket hike dropped : ஆந்திரப் பிரசேத்தில் பெத்தி படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Peddi ticket hike dropped : ஆந்திரப் பிரசேத்தில் பெத்தி படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published on: May 30, 2026 at 3:10 pm
ஹைதராபாத், மே 30, 2026: நடிகர் ராம் சரண் – நடிகை ஜான்வி கபூர் இணைந்து நடிக்கும் ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ஆந்திரப் பிரதேசத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, டிக்கெட் விலை ₹600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் டிக்கெட் விலை உயர்த்தும் மனுவை தயாரிப்பாளர்கள் வாபஸ் பெற்றுள்ளனர். புச்சி பாபு சனா இயக்கியுள்ள பெத்தி படத்தில், ராம் சரண், ஜான்வி கபூர், ஷிவராஜ்குமார், ஜகபதி பாபு, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ஜூன் 3, 2026 அன்று இரவு 8 மணிக்கு படத்தின் பிரீமியர் காட்சி நடைபெற உள்ளது. இந்தப் படத்துக்கு, முதல் வாரத்தில் சிங்கிள் ஸ்கிரீன் டிக்கெட் ₹100 உயர்வுக்கும், மல்டிப்ளெக்ஸ் டிக்கெட் ₹125 உயர்வுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமும் 5 காட்சிகள்
மேலும், பெத்தி படத்துக்கு தினமும் ஐந்து காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, படம் ஜூன் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக, படத்தின் தயாரிப்பாளர்கள் டிக்கெட் விலை உயர்த்த மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்க விருப்பம் காட்டாததால், மனுவை வாபஸ் பெற்றனர்.
இதனால், தெலுங்கானாவில் டிக்கெட் விலை உயர்வு தொடர்பான முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com