படிதார்-ஐ இந்திய அணிக்கு தூக்குங்க.. தேர்வு குழுவுக்கு அஸ்வின் அட்வைஸ்!

Ashwin Urges Agarkar : ஐ.பி.எல் 2026 பிளேஆஃப் போட்டியில் ராஜத் படீதார் ஆடிய அபார இன்னிங்ஸை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆர். அஸ்வின், வெகுவாக பாராட்டியுள்ளார்.

Published on: May 28, 2026 at 11:01 am

சென்னை, மே 28, 2026: இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர். அஷ்வின், ஐ.பி.எல் 2026 பிளேஆஃப் போட்டியில் ராஜத் படீதார் ஆடிய அபார இன்னிங்ஸை மனதார பாராட்டியுள்ளார்.. மேலும், இந்திய அணிக்கான தேர்வில் அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அஸ்வின், “ஷ்ரேயஸ் அய்யர் முன்னிலையில் இருந்தார், ஆனால் இப்போது படீதார் சமமாக வந்துள்ளார்” எனக் கூறியுள்ளார். ஐ.பி.எல்.லில் இறுதி போட்டிக்கு செல்லும் ஆட்டத்தில் படிதார், 93 ரன்கள் விளாசினார். இதில், 33 பந்துகள், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். இந்தப் போட்டியில் அவர் மேன் ஆஃப் தி மேட்ச் பரிசும் பெற்றார்.

இந்த நிலையில் ஆர். அஸ்வின், “இது முதல் முறை அல்ல, படீதார் எப்போதும் பெரிய போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். முன்பு, ஷ்ரேயஸ் அய்யர் முன்னிலையில் இருந்தார், ஆனால் இப்போது படீதார் சமமாக வந்துள்ளார். அவரை இந்திய அணிக்கான விவாதத்தில் சேர்க்க வேண்டும், இல்லையெனில் அது தவறு; அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமல்ல, பேஸர்களுக்கும் எதிராக சிறப்பாக விளையாடினார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 17 வயது சிறுமி புகார்.. யஷ் தயால், ஆர்.சி.பி. அணிக்காக விளையாடாதது ஏன்?

இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டி.. பத்து ஆண்டுகளுக்கு முன் வரலாற்றை பதிவு செய்த விராட் கோலி.. தற்போது நினைவு கூறப்படுவது ஏன்?
Virat Kohli

இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டி.. பத்து ஆண்டுகளுக்கு முன் வரலாற்றை பதிவு செய்த

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com