Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கிவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கிவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 28, 2026 at 10:32 am
மும்பை, மே 28, 2026: நடப்பாண்டு (2026) ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதாவது, ஐ.பி.எல் அட்டவணையில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கிவிட்டார் எனக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும், அவர் அடுத்ததாக எந்த அணிக்கு செல்லப்போகிறார் என்ற ஊகங்களையும் தூண்டியுள்ளது. இதற்கிடையில், ஹார்திக் பாண்ட்யாவின் Instagram பக்கத்தைத் தேடும்போது “User not found” எனக் காட்டுகிறது. சில நேரங்களில் “Something went wrong” என்ற செய்தியும் தோன்றுகிறது.
இதனால், அவர் தனது கணக்கை முழுமையாக நீக்கியிருக்கிறார் என ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த ஐ.பி.எல் தொடரில், 10 போட்டிகளில் 206 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், பந்துவீச்சிலும் சோபிக்கவில்லை; 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருந்தார். இதற்கிடையில் காயம் காரணமாக போட்டிகளில் இருந்தும் வெளியேறினார்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ், 9வது இடத்தில் முடித்து, பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது. இதற்கிடையில், ஹார்திக் பாண்ட்யா, சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு செல்லலாம் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின.
இதையும் படிங்க கிறிஸ் கெயில் சாதனை ஜஸ்ட் மிஸ்.. 97 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி.. இருக்கை நுனிக்கு வந்த ரசிகர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com