Anbumani Ramadoss: “பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது; அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது” என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Anbumani Ramadoss: “பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது; அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது” என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Published on: May 25, 2026 at 11:20 pm
சென்னை, மே 25, 2026: பதவி விலகிய அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர்.
இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்? எனக் கேள்வியெழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது.
அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மேகதாது அணையை கட்ட விட மாட்டோம்.. அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com