கால்நடை மருத்துவப் படிப்பு..விண்ணப்பபதிவு தொடக்கம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Veterinary Course Applications : கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பபதிவு இன்று தொடங்கியது.

Published on: May 25, 2026 at 4:41 pm

Updated on: May 25, 2026 at 5:33 pm

சென்னை, மே 25 2026: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 17, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) சார்பில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

  • மாணவர்கள் https://adm.tanuvas.ac.in (adm.tanuvas.ac.in in Bing) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 17, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு, சேலம் தலை​வாசல், உடுமலைப்​பேட்​டை, தேனி வீர​பாண்டி ஆகிய 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 660 இடங்களுக்கு சேர்க்கை நடைபெறும்.
  • இதில் 15% இடங்கள் அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
  • மீதமுள்ள இடங்கள் தமிழ்நாடு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
  • மாணவர்கள் பிளஸ்-2 (Biology, Physics, Chemistry) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 7.5 CGPA மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • பிளஸ்2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகம் தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பக் கட்டணம் ₹1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: மே 25, 2026(இன்று)
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 17, 2026 மாலை 5 மணி
  • சேர்க்கை பட்டியல் வெளியீடு: ஜூன் இறுதி வாரம்
  • வகுப்புகள் தொடங்கும் நாள்: ஜூலை 2026 முதல் வாரம்

இதையும் படிங்க : நீட் இளங்கலை தேர்வு 2026.. பணம் வாபஸ், போர்டல் திறப்பு.. மாணவர்களே நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com