சீல் வைக்கப்பட்டும் இயங்கிய கல்குவாரி.. ஈரோட்டில் மக்கள் கொந்தளிப்பு!

Illegal Quarry in Erode : ஈரோட்டில் சீல் வைக்கப்பட்டும் இயங்கிய கல்குவாரியால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Published on: May 24, 2026 at 5:23 pm

ஈரோடு, மே 24, 2026: ஈரோடு மாவட்டம் பவானிக்கு அருகே விண்ணப்பள்ளி பகுதியில், அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரி மற்றும் கிரஷர் நிறுவனம் மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்குவாரி மீது அரசு அனுமதி பெறாமல் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வில் சட்டவிரோதம் கண்டுபிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையில், சீல் வைக்கப்பட்டிருந்தும், நிறுவனம் மீண்டும் கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சத்தியமங்கலம் வருவாய் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். தொடர்ந்து, அங்கிருந்து இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

அமைச்சர் உத்தரவு

புதிய கனிமவளத் துறை அமைச்சர் பிரபு, தமிழகம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், இந்தக் கல்குவாரியால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது என்றும் ஊழியர்கள் மதுபோதையில் வாக்குவாதம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : காங்கிரஸ் டூ பா.ஜ.க.., தி.மு.க. வரலாறை சொல்லட்டுமா.. திருநாவுக்கரசர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com