Yogi Babu’s Tenth Avatar Poster : நகைச்சுவை நாயகன் யோகி பாபு, 10 விதமான கெட்அப்-களில் திரையில் தோன்றவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Yogi Babu’s Tenth Avatar Poster : நகைச்சுவை நாயகன் யோகி பாபு, 10 விதமான கெட்அப்-களில் திரையில் தோன்றவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: May 24, 2026 at 10:36 am
சென்னை, மே 24, 2026: தமிழ் திரையுலக நகைச்சுவை நாயகன் யோகி பாபுவின் புதிய பட அப்டேட் வெளியாகியுள்ளது. ‘9 லைட்ஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு 10 விதமான வேடங்களில் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தனது புதிய படத்தில் 10 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கிஷோர் குமார் இயக்குகிறார். 9 லைட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம், யோகி பாபுவின் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
10 அவதாரத்தில் யோகி பாபு
#9Lights Productions is glad to announce their Production No 01, with the First Look Starring @iYogiBabu First Time in 10 Different avatars.
— Ramesh Bala (@rameshlaus) May 22, 2026
Shooting commencing soon !
Directed by #KishoreKumar
Produced by #9Lights Productions pic.twitter.com/WPjz3GFHUt
போஸ்டரில், யோகி பாபு பல்வேறு வேடங்களில் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் போஸ்டரை பெரும் வரவேற்புடன் பகிர்ந்து வருகின்றனர். யோகி பாபு, 2009-ஆம் ஆண்டு அமீர் இயக்கிய ‘யோகி’ படத்தில் அறிமுகமானார். பின்னர், கலகலப்பு (2012), மான் கராத்தே (2014) உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தொடர்ந்து, ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். இந்நிலையில், யோகி பாபு 10 வேடங்களில் நடிக்கும் இந்த படம், அவரது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க : படப்பிடிப்பில் சலார்-2.. கே.ஜி.எஃப்-3 எப்போது? பிரசாந்த் நீல் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com