இந்தியாவில் எபோலா பாதிப்பு இல்லை.. இந்த 3 நாடுகள் செல்ல வேண்டாம்.. சுகாதார அமைச்சகம்!

Ebola Outbreak : எபோலா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, எந்தெந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்திய அரசு பட்டியலிட்டுள்ளது.

Published on: May 24, 2026 at 11:20 am

புதுடெல்லி, மே 24, 2026: இந்திய சுகாதார அமைச்சகம் எபோலா வைரஸ் பரவல் காரணமாக காங்கோ, உகாண்டா மற்றும் தென் சூடான் நாடுகளுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், உலக சுகாதார நிறுவனம் இதை “சர்வதேச சுகாதார அவசர நிலை” என அறிவித்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா, தென் சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் எபோலா வைரஸ் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் இந்தப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணங்களை தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது; மேலும், இதனை சர்வதேச சுகாதார அவசர நிலை எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காங்கோ நாட்டில் 746 சந்தேகிக்கப்படும் நோயாளிகள் உள்ளனர். 176 மரணங்கள் பதிவாகியுள்ளன.

உகாண்டாவை பொறுத்தவரை, 85 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் உள்ளனர்; 10 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் அல்லது குணமாக்கும் வகையில் இதற்கான தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட சிகிச்சை தற்போது இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்திய அறிவுறுத்தல்

இந்த நிலையில், காங்கோ, உகாண்டா, தென் சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இந்தியாவில் இதுவரை எபோலா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : லடாக்கில் திடீர் ஹெலிகாப்டர் விபத்து.. உயிர் பிழைத்த 3 அதிகாரிகள்.. பகீர் தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com