கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை.. இருவர் கைது.. தீவிர விசாரணை!

Covai Minor Girl Murder Case : கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: May 23, 2026 at 10:28 pm

கோவை, மே 23, 2026: கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் (33) மற்றும் அவரது நண்பர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், முதலில் “சிறுமி காணாமல் போனார்” என பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. மே 21, 2026 அன்று மாலை 5 மணிக்கு சிறுமி காணாமல் போனதாக தகவல் வந்தது.

இரவு 8.30 மணிக்கு போலீசுக்கு 100 ஹெல்ப்லைன் மூலம் தகவல் கிடைத்ததும், தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மூலம், சிறுமியை அருகாமை அயலவர் கார்த்திக் அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

போலீசார் கார்த்திக்கை சுற்றிவளைத்தபோது, அவர் தப்பிக்க முயன்று, முதல் மாடியில் இருந்து குதித்ததால் கை, கால் முறிவு ஏற்பட்டது. அவர் தற்போது கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணையில், கார்த்திக் குற்றத்தை ஒப்புக்கொண்டு, தனது நண்பர் மோகன்ராஜ் உதவியதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் மோகனும் கைது செய்யப்பட்டார்” எனத் தெரிவித்தனர்.

குளத்தில் உடல் வீச்சு

இந்த நிலையில், சிறுமியின் உடல், அவரது வீட்டிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அரசியல் கடுமையான எதிரொலியையும் தூண்டியுள்ளது. இதற்கிடையில், போலீசார், விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணையை விரைவுபடுத்தி, சிறுமி மற்றும் அவரது குடும்பத்துக்கு நீதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற காவல்

இந்த வழக்கில் கார்த்திக்கு ஜூன் 5ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை

இந்த வழக்கு குறித்து பேசிய மேற்கு மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.வி. ரம்யா பாரதி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசாரின் துரித நடவடிக்கை காரணமாக குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க : ஓடும் லாரிக்குள் சிறுமி பாலியல் வன்கொடுமை.. தம்பதி, கிளீனர் அதிரடி கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com