இவாங்கா டிரம்பை கொல்ல சதி? பரபரப்பு தகவல்கள்!

Ivanka Trump Assassination Plot Foiled : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா டிரம்பை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: May 23, 2026 at 3:46 pm

நியூயார்க், மே 23, 2026: நியூயார்க் போஸ்ட் தகவலின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், ஈரானில் பயிற்சி பெற்ற ஈராக்கியர் முகம்மது பாகர் சாத் தாவூத் அல்-சாதியால் படுகொலைச் சதித்திட்டத்தில் இலக்காக இருந்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020-இல் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரானிய தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த சதித்திட்டம் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யார் இந்த அல்-சாதி?

அல்-சாதி மே 15 அன்று துருக்கியில் கைது செய்யப்பட்டு, பின்னர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர், 18 தாக்குதல்கள் மற்றும் முயற்சிகளில் தொடர்புடையவர் என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையில், அவர் யூதத் தலங்கள், அமெரிக்க தூதரகங்கள்,குண்டு வீச்சுகள், துப்பாக்கிச் சூடுகள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் மீது அவர் குறிவைத்துள்ளார். இது தற்போது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், இவாங்கா டிரம்ப் பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவருக்கு உயர் அடுக்கு பாதுகாப்புகள் அவசியம் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க : சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து.. 82 பேர் உயிரிழப்பு, 9 பேர் மாயம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com