Kajal Aggarwal: காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
Kajal Aggarwal: காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தில் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

Published on: May 21, 2026 at 7:02 pm
மும்பை, மே 21 2026: காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சேட்டன் டிகே இயக்கியுள்ள இந்த படத்தை சாகர் பி ஷிண்டே தயாரித்து கதை எழுதியுள்ளார். Zee ஸ்டுடியோஸ் மற்றும் MIG தயாரிப்பு & ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை வழங்குகின்றன.
இந்த படம் சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தவறான பயன்பாடு பொதுமக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கதைக்களமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் சாகர் பி ஷிண்டே கூறுகையில், “இந்தக் கதை நாட்டில் பலரின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு உண்மையை பிரதிபலிக்கிறது. என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் செட்டன் டிகே கூறுகையில், படக்குழுவினர் அனைவரும் இந்த கதையை உணர்வுப்பூர்வமாகவும் நம்பகத்தன்மையுடனும் கொண்டு வர கடுமையாக உழைத்துள்ளதாக தெரிவித்தார்.
“The India Story” திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது. சமூக பிரச்சினை வலுவான கதைக்களம் மற்றும் உணர்ச்சிபூர்வமான திரைக்கதை காரணமாக இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : கோவிலில் அவமானம், இஸ்லாம் மதம் மாறிய ஜெய்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com