Logesh Tamilselvan : முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழக வெற்றிக் கழக அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
Logesh Tamilselvan : முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், தமிழக வெற்றிக் கழக அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

Published on: May 21, 2026 at 5:24 pm
சென்னை, மே 21 2026: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன். முன்னதாக அதிமுகவில் பயணித்த இவர், 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.
லோகேஷ் தமிழ்ச்செல்வன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டிருந்தார். பின்னர் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் குடும்பம் மீண்டும் தமிழக அரசியல் மற்றும் ஆட்சித்துறையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
முன்னாள் சபாநாயகர் தனபால், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், பின்னர் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜய் அமைச்சரவை விரிவாக்கம்.. தூத்துக்குடி எம்.எல்.ஏ அமைச்சர்.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com