10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாவட்ட அளவில் புதுக்கோட்டை முதலிடம்!

Tamil Nadu Class 10 exam results : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20, 2026) காலை வெளியாகின. இதில் மாவட்ட அளவில் புதுக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது.

Published on: May 20, 2026 at 1:14 pm

சென்னை, மே 20, 2026: தமிழ்நாடு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாநில அளவில் 94.31% தேர்ச்சி பெற்ற நிலையில், மாவட்ட வாரியாக புதுக்கோட்டை முதலிடம் பிடித்துள்ளது.

மாநில அளவிலான தேர்ச்சி

2025-26 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்றன. இதில், மொத்தம் 8,70,643 மாணவர்கள் தேர்வெழுதியதில் 8,21,105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 94.31% தேர்ச்சி பெற்றுள்ளனர், இது கடந்த ஆண்டை விட 0.51% அதிகம் ஆகும். மேலும், வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 4.32% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக முதலிடம்

புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு முதலிடம் பிடித்த சிவகங்கை (98.31%) இந்தாண்டு 97.54% தேர்ச்சியுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
தொடர்ந்து, தஞ்சாவூர் (97.41%) மூன்றாம் இடம், திருச்சி (97.31%) நான்காம் இடம், கன்னியாகுமரி (97.30%) ஐந்தாம் இடம் பிடித்துள்ளன. இதற்கிடையில், கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த விருதுநகர் (97.45%) இந்தாண்டு 14-வது இடத்திற்கு (96.02%) தள்ளப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களின் சாதனை

அரசு பள்ளிகளில் சிவகங்கை மாவட்டம் 97.42% தேர்ச்சியுடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, புதுக்கோட்டை (97.09%) இரண்டாம் இடம், தஞ்சாவூர் (96.89%) மூன்றாம் இடத்தில் உள்ளன. மேலும், ராமநாதபுரம் (96.78%) நான்காம் இடம், திருச்சி (96.48%) ஐந்தாம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, விருதுநகர் கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 17-வது இடத்திற்கு (93.71%) தள்ளப்பட்டுள்ளது.

மாவட்டங்களின் முன்னேற்றம்

கடந்த ஆண்டு 12-வது இடத்தில் இருந்த தஞ்சாவூர் (95.57%), இந்தாண்டு 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. திருச்சி 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கன்னியாகுமரி 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் 24-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறி சிறப்பான சாதனை படைத்துள்ளது.

இந்தாண்டு தேர்வெழுதிய மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் மாநில அளவில் உயர்ந்துள்ளது. மாணவிகள் தொடர்ந்து அதிக தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர்.மாவட்ட வாரியாகவும், அரசு பள்ளி மாணவர்களின் சாதனைகளும் மாநில கல்வி தரத்தை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சென்னை ஐ.ஐ.டி.யில் ஏ.ஐ ஆராய்ச்சி கண்காட்சி.. ஏராளமானோர் கண்டுகளிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com