SC CJI: “அமைதியான போராட்டம் உரிமை. ஆனால்,” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.
SC CJI: “அமைதியான போராட்டம் உரிமை. ஆனால்,” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.

Published on: May 19, 2026 at 9:01 pm
புதுடெல்லி, மே 19, 2026: இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில், குடிமக்களுக்கு அமைதியான போராட்டம் நடத்தும் உரிமை அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது தெருக்களில் குழப்பம், வன்முறை அல்லது சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இது குறித்து அவர், அரசியலமைப்பின் கீழ், மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை பெற்றுள்ளனர். ஆனால் அந்த உரிமை, பொது ஒழுங்கை குலைக்கும் வகையில் பயன்படுத்தப்படக் கூடாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இளைஞர்கள் மீது போராட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதைப் பற்றிய கவலைக்கு பதிலளித்தது.
அப்போது தலைமை நீதிபதி, “சட்டத்தின் வரம்புக்குள் அனைவருக்கும் போராட்ட உரிமை உண்டு, ஆனால் அது தெருக்களில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது” எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவின் முதல் புல்லட் ரெயில்.. எப்படி இருக்கு? 60 சதவீத பணிகள் நிறைவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com