Karuppu Hits ₹80 Cr : நடிகர் சூர்யா-திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது; இந்தப் படத்தின் நான்காம் நாள் வசூல் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
Karuppu Hits ₹80 Cr : நடிகர் சூர்யா-திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது; இந்தப் படத்தின் நான்காம் நாள் வசூல் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: May 19, 2026 at 1:38 pm
சென்னை, மே 19, 2026: சூர்யா, த்ரிஷா நடித்த கருப்பு படம் நான்காவது நாளான முதல் திங்கட்கிழமையிலும் வலுவாக நிலைத்துள்ளது. இந்தியாவில் ₹82.30 கோடி நெட் வசூலை எட்டியுள்ளதுடன், உலகளவில் ₹141.30 கோடி வரை சென்றுள்ளது.
இந்தப் படம் ரூ.15.50 கோடி முதல் நாளிலும், ரூ.24.15 கோடி இரண்டாம் நாளிலும், ரூ.28.35 கோடி மூன்றாம் நாளிலும் வசூலித்துள்ளது. இந்த நிலையில் நான்காம் நாளான திங்கள்கிழமை படம் ரூ.14.30 கோடி வசூலித்துள்ளது.
இந்தப் படத்தின் மொத்த இந்திய நெட் வசூல் ₹82.30 கோடி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளிநாட்டு வசூல் ரூ.46 கோடியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் உலகளாவிய மொத்தம் ₹141.30 கோடியாக காணப்படுகிறது.
ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தள்ளது. படத்தில், சூர்யா, த்ரிஷா, RJ பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி சுப்ரமணியம், சுவாசிகா, சிவ்வதா, சுப்ரீத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், கருப்பு படம் முதல் வாரத்தில் வலுவான தொடக்கத்துடன், 2026ஆம் ஆண்டின் மிகப்பெரிய தமிழ் ஹிட் படமாக உருவெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தாஜ்மஹாலை நேரில் பார்ப்பது என் கனவு.. கொரிய நடிகை யேரி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com