சல்மான், ஆமிர் கான் உத்வேகம்.. மல்யுத்த வீரராக ராம் சரண்!

Peddi Inspired by Khan Hits : ராம் சரண் தனது புதிய படம் பெட்டி குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், தனது படத்திற்கான ப்ளூபிரிண்ட் இதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

Published on: May 19, 2026 at 11:19 am

Updated on: May 19, 2026 at 1:12 pm

ஹைதராபாத், மே 19, 2026: ராம் சரண் தனது புதிய படம் பெட்டி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். அதில், சல்மான் கான் நடித்த சுல்தான் மற்றும் ஆமிர் கான் நடித்த டங்கல் ஆகியவை தான் தன்னுடைய படத்திற்கான ப்ளூபிரிண்ட் எனத் தெரிவித்துள்ளார். மேலும் “அந்த படங்கள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்தன, அதே பாதையை நாங்கள் பின்தொடர்ந்தோம்” என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சல்மான், ஆமிர் படங்களின் தாக்கம்

2016ஆம் ஆண்டு வெளியான சுல்தான் திரைப்படத்தில், சல்மான் கான் மல்யுத்த வீரராக நடித்திருப்பார். இந்த மல்யுத்த கதையை மையமாகக் கொண்ட படம், இந்தியாவில் ₹300 கோடியும், உலகளவில் ₹623 கோடியும் வசூல் வேட்டை நடத்தியது.

அதே ஆண்டு (2016) ஆமிர் கான் நடித்த மகவீர் போகட் மற்றும் அவரது மகள்களின் உண்மை கதையாக டங்கல் வெளியானது. இந்தப் படம் இந்தியாவில் ₹387 கோடி, சீனாவில் பெரும் வெற்றி பெற்று ₹2000 கோடி வசூல் வேட்டை நடத்தியது.

பெட்டி படத்தின் கதை

இந்த நிலையில் பெட்டி படத்தின் கதை ஒரு கிராமத்து இளைஞன் தனது அடையாளத்தை தேடும் பயணத்தை மையமாகக் கொண்டது என நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “இது ஒரு மனிதனின் அடையாள தேடல். ஒரு பெரிய காரணத்திற்காக அவர் ‘கிராஸ்ஓவர்’ விளையாட்டு வீரராக மாறுகிறார்.” என்றார்.

பெட்டி படம் ஜூன் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில், ஜான்வி கபூர், போமன் இரானி, திவ்யேந்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய இசை ராணி.. யார் இந்த அம்பிகா நாயக்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com