சிகிச்சைக்கு பணம் இல்லை.. நடுரோட்டில் இறக்கிவிட்ட டாக்ஸி டிரைவர்.. மூத்த நடிகையின் பரிதாப நிலை!

Pavala Shyamala : தெலுங்கின் பிரபல துணை நடிகையான பாவலா ஷ்யாமளா வறுமையில் வாடி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 18, 2026 at 2:40 pm

ஹைதராபாத், மே 18, 2026: பாவலா ஷ்யாமளா, 1985 முதல் நூற்றுக்கணக்கான தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் நடித்த மூத்த நடிகை ஆவார். இவர், கடந்த சில ஆண்டுகளாக கடுமையான உடல்நல மற்றும் நிதி சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில், ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற அவர் பணம் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டு, டாக்ஸியில் திரும்பி அனுப்பப்பட்டார். இதற்கிடையில், டிரைவர் இரவு நேரத்தில் சாலையோரத்தில் விட்டுச் சென்றதால், போலீசார் அவரை மீட்டனர். அவருக்கு படத் தயாரிப்பாளர் தில் ராஜு உடனடியாக உதவி செய்துள்ளார்.

பாவலா ஷ்யாமளா சினிமா வாழ்க்கை

பாவலா ஷ்யாமளா, 1985 முதல் தெலுங்கு சினிமாவில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். இவர், 1988ல் ஸ்வர்ணகமலம், 2002ல் இந்திரா, கட்கம், 2004ல் வர்ஷம் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
சிறுவயதில் தாயை இழந்த பாவலா ஷ்யாமளா, 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் ஆவார். மேலும், இவர் கணவரை இழந்த பிறகு, மகளுடன் வாழ்ந்து வந்தார்.

நடந்தது என்ன?

இந்த நிலையில், மே 15, 2026 அன்று ஹைதராபாத் குகட்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இதய நோய் சிகிச்சைக்காக சென்றார். அங்கு போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை அனுமதி மறுத்து, டாக்ஸியில் திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில், டிரைவர் இரவு நேரத்தில் ஒய் ஜங்ஷன் அருகே சாலையோரத்தில் விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரை போலீசார் மீட்ட நிலையில் அவருக்கு படத்தயாரிப்பாளர் தில் ராஜூ மருத்துவ உதவிகள் உள்ளிட்டவற்றை செய்துள்ளார்.

இதையும் படிங்க : அவசியமற்ற செலவுகளை தவிர்ப்போம்.. ஒன்றுபடுவோம், வென்றுகாட்டுவோம்.. ஹேமா மாலினி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com