Trump Warns Iran: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Trump Warns Iran: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Published on: May 18, 2026 at 1:28 pm
நியூயார்க், மே 18, 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தைகள் நின்ற நிலையில், “கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது” என எச்சரித்து, ஈரானை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா- ஈரான் பேச்சு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக முன்னேற்றமின்றி நிற்கின்றன. முக்கியமாக அணு ஒப்பந்தம், பிராந்திய பாதுகாப்பு, வணிகத் தடைகள் ஆகியவை விவாதத்தில் உள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இனி தாமதிக்காமல், விரைவாக முடிவெடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். மேலும், “ஈரான் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்” எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் இந்தப் பேச்சினால், இது, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகள், அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டுமென வலியுறுத்துகின்றன.
ஐ.நா. மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், போருக்கு பதிலாக பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண வேண்டும் எனக் கூறுகின்றன. அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தால், மத்திய கிழக்கு நிலைமை சீராகும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சர்வதேச சுகாதார எமர்ஜென்சி.. அச்சுறுத்தும் எபோலா.. அறிகுறிகள் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com