நடிகர் ரவி மோகன்- கெனீஷா உறவு முறிவு? பரபரக்கும் கோடம்பாக்கம்

Keneeshaa Walks Away : நடிகர் ரவி மோகன், பாடகி கெனீஷா இடையேயான உறவு முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Published on: May 16, 2026 at 10:34 am

சென்னை, மே 16, 2026: கெனீஷா பிரான்சிஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகர் ரவி மோகனுடன் உள்ள உறவை முடித்துவிட்டதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். “அவர் இப்போது உங்களுடையவர்” என்று குறிப்பிட்ட அவர், சென்னை நகரை விட்டு வெளியேறியதாகவும், சமூக வலைதளங்களை விட்டு விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கெனீஷாவின் உணர்ச்சிகரமான பதிவுகள்

பாடகி கெனீஷா பிரான்சிஸ் சமீபத்தில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு தனது கடந்தகால துயரங்களை பகிர்ந்துகொண்டார். அதில், சிறுவயதில் ஏற்பட்ட துன்பங்கள், திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், கருவிழப்பு போன்றவற்றை வெளிப்படையாக கூறிய அவர், ரவி மோகனை முதலில் சிகிச்சை அளிக்கும் நோக்கில் சந்தித்ததாகவும் பின்னர் நட்பாக மாறியதாகவும் விளக்கினார்.

ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து

இந்நிலையில், ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவியுடன் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், கெனீஷா மீது “குடும்பத்தை உடைத்தவர்” என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அவர் கடுமையான ஆன்லைன் தாக்குதல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தார். நடிகை குஷ்பூ சுந்தர் தனது இன்ஸ்டாகிராமில் பைபிள் வசனங்களை குறிப்பிட்டு மறைமுகமாக கெனீஷாவை குற்றம் சாட்டியதும், ஆர்த்தி அதை விரும்பியதும் விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

சென்னை விட்டு வெளியேறிய கெனீஷா

இந்த நிலையில் கெனீஷா, “நான் இந்தக் கதைக்குள் காதலுடன் வந்தேன், அமைதியுடன் வெளியேறுகிறேன்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கெனீஷா, சென்னை நகரை விட்டு வெளியேறியதாகவும், இனி சமூக வலைதளங்களில் விளக்கமளிக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். “அவர் இப்போது உங்களுடையவர்” என்ற வரிகள், ரவி மோகனுடன் உள்ள உறவு முறிந்துவிட்டதை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

பரபரப்பு

இந்த விவகாரம் ரவி மோகனின் விவாகரத்து வழக்குடன் இணைந்து, தமிழ் சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இந்தி தெரியாத சீதா தேவியா? சாய் பல்லவிக்கு சிக்கல்? படக்குழு முக்கிய முடிவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com