Dubai | துபாயில் விமான டாக்ஸி பயன்பாடு 2026 முதல் காலாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
February 6, 2025
Dubai | துபாயில் விமான டாக்ஸி பயன்பாடு 2026 முதல் காலாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on: September 19, 2024 at 12:24 am
Dubai | விமான டாக்ஸி முதல் நிலையம் விரைவில் அறிவிக்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஏ) தெரிவித்துள்ளது. இதனால், முதல் ஏர் டாக்ஸி நிலையத்தின் அதிகாரப்பூர்வ செயல்பாடு 2026 முதல் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் நான்கு நிலையங்களின் ஆரம்ப தொடக்கமும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, பொது போக்குவரத்து முகமையின் இயக்குனர் காலித் அல் அவதி, “இந்த திட்டம் தன்னாட்சி விமான போக்குவரத்து துறையில் ஒரு லட்சிய படியாக கருதப்படுகிறது, மேலும் விமான டாக்ஸி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சேவை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டம் நவீன மற்றும் பயனுள்ள போக்குவரத்து வழிமுறைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.
சேவையின் முதல் கட்டம் துபாயில் நான்கு தரையிறங்கும் தளங்களை உள்ளடக்கும். அந்த இடங்கள், துபாய் சர்வதேச விமான நிலையம், டவுன்டவுன், துபாய் மெரினா மற்றும் பாம் ஜுமேரா ஆகும். இந்தத் தரையிறங்கும் பகுதிகள், மின்சார சார்ஜிங் வசதிகள், பிரத்யேக பயணிகள் பகுதி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
இதையும் படிங்க : லெபனானில் வாக்கி டாக்கி குண்டுவெடிப்பு: 9 பேர் பலி- 300 பேர் காயம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com