ராதாபுரம் எம்.எல்.ஏ பதவியேற்பு.. த.வெ.க தொண்டர்கள் உற்சாகம்!

Radhapuram : ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சதீஷ் கிறிஸ்டோபர் இன்று (மே 11, 2026) பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சமூக வலைதளத்திலும் நேரிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

Published on: May 11, 2026 at 5:33 pm

சென்னை, மே 11, 2026: ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சதீஷ் கிறிஸ்டோபர், இன்று (திங்கள்கிழமை) சட்டமன்ற உறுப்பினராக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் எம்.எல்.ஏ ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ஆக பொறுப்பேற்றுக் கொண்ட சதீஷ் கிறிஸ்டோபருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் நேரிலும், சமூக வலைதளத்திலும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. இந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் (இந்திய மற்றும் மார்க்சிஸ்ட்) மற்றும் வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு உள்ளது.
இந்த நிலையில், தனிப்பெரும்பான்மையை மே 13ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என கவர்னர் அர்லேக்கர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.. முத்தான மூன்று திட்டங்களில் முதல் கையெழுத்து!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com