IPL 2026 Hits 1000 Sixes : சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
IPL 2026 Hits 1000 Sixes : சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Published on: May 10, 2026 at 8:25 pm
சென்னை, மே 10, 2026: ஐ.பி.எல் 2026 வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது; 53 போட்டிகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு, இதுவரை குறைந்த போட்டிகளில் இந்த மைல்கல் எட்டப்பட்டது.
சென்னை சேப்பாக்கில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் போட்டியில் இந்த சாதனை நிகழ்ந்தது.
இந்தப் போட்டியில் மொத்தம் 27 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதாவது, ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக 55 போட்டிகளுக்கு முன்பே 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.
முந்தைய 2024 ஐ.பி.எல் போட்டிகளில் 57 போட்டிகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இந்த சாதனை IPL-இன் பவர் ஹிட்டிங் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் ரசிகர்கள் “சிக்ஸர்களின் ஐ.பி.எல்” எனக் கொண்டாடினர். மேலும், சி.எஸ்.கே ரசிகர்கள், சேப்பாக்கில் நடந்த இந்த வரலாற்று தருணத்தை பெருமையுடன் பகிர்ந்தனர்.
இதையும் படிங்க : ஆசிய இளையோர் குத்துச் சண்டை போட்டி.. இந்தியா அபாரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com