ஜன கன மன போல் வந்தே மாதரம் பாடலுக்கு அங்கீகாரம்.. அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு

Asaduddin Owaisi : சட்டரீதியான பாதுகாப்பை ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை, அசாதுதீன் ஒவைசி எதிர்த்துள்ளார்.

Published on: May 8, 2026 at 4:03 pm

புதுடெல்லி, மே 8, 2026: தேசிய கீதமான ‘ஜன கன மன’விற்கு அளிக்கப்பட்டுள்ள அதே சட்டரீதியான பாதுகாப்பை ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி எதிர்த்துள்ளார்.

இது குறித்து அவர், ‘வந்தே மாதரம்’ ஒரு தேவியைப் போற்றும் பாடல் என்பதால், அதனை தேசிய கீதத்திற்கு இணையாகக் கருத முடியாது என்று கூறினார். தொடர்ந்து, இந்நாடு எந்தவொரு கடவுள் அல்லது தேவதையின் பெயராலும் இயங்கவில்லை; மேலும் இது குறிப்பிட்ட ஒரு கடவுள் அல்லது தேவதைக்கு மட்டும் சொந்தமானதும் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஓவைசி, “ஜன கண மன பாடல் இந்தியாவையும் அதன் மக்களையும் போற்றுகிறதே தவிர, குறிப்பிட்ட ஒரு மதத்தையல்ல. மதம் என்பது நாடு அல்ல. ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அனுதாபம் கொண்டவராகவும், முஸ்லிம்களை வெறுத்தவராகவும் இருந்தார். நேதாஜி போஸ், காந்தி, நேரு மற்றும் தாகூர் ஆகிய அனைவரும் அப்பாடலை நிராகரித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “அரசியலமைப்பின் முகப்புரை ‘பாரத மாதா’ என்று தொடங்காமல், “நாங்கள், இந்திய மக்கள்” என்றே தொடங்குகிறது என்று கூறினார். அது “சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, பற்று மற்றும் வழிபாடு ஆகியவற்றிற்கான சுதந்திரத்தை” உறுதி செய்கிறது” என்றார்.

இதையும் படிங்க கேரளத்தில் யார் CM? காங்கிரஸ் வேணுகோபால், சதீசன் தரப்பு தீவிரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com