அமெரிக்காவில் பெண் ஊழியர் மீது பாலியல் புகார்: பாதிக்கப்பட்டவர் இந்தியர் அல்ல!

JP Morgan: ஜே.பி.மோர்கன் வழக்கு: பாதிக்கப்பட்டவர் இந்தியர் அல்ல; 1 மில்லியன் அமெரிக்க டாலர் சமரச ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 8, 2026 at 11:39 am

நியூயார்க், மே 8, 2026: அமெரிக்க வங்கியான ஜே.பி. மார்கன் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், பாதிக்கப்பட்டவர் இந்தியர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு, வங்கியின் முன்னாள் ஊழியர்களின் செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை குறைபாடுகளை வெளிப்படுத்தியதால், உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

சமரச ஒப்பந்தம்

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு $1 மில்லியன் (சுமார் ₹8.3 கோடி) அளவிலான சமரச ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது, வழக்கு நீண்ட காலம் நீடிக்காமல், இரு தரப்பும் விரைவில் தீர்வு காணும் நோக்கத்துடன் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியர் இல்லை

முதலில், பாதிக்கப்பட்டவர் இந்தியர் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அந்த தகவல் தவறானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கியுள்ளது.மேலும், இந்த வழக்கு, பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பாலியல் குற்றச்சாட்டுகள், பணியாளர் பாதுகாப்பு, நிர்வாக பொறுப்புகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

நிறுவனம் மறுப்பு

முன்னதாக, ஜேபி மோர்கன் நிர்வாக இயக்குநர் லோர்னா ஹஜ்டினி மீது பாலியல் மற்றும் இனவெறி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட வங்கி உள்துறை விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என ஜேபி மோர்கன் நிராகரித்தது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் விருது.. யார் இந்த இருவர்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com