பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிப்போம்.. கிரிஷ் சோடங்கர்

Girish Chodankar : தமிழ்நாட்டில் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.

Published on: May 7, 2026 at 10:54 pm

சென்னை, மே 7, 2026: காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்“ என அழைப்பு விடுத்தார்.

சட்டமன்றத்தில் நிரூபிப்போம்..

தொடர்ந்துப் பேசிய அவர், “அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக உள்ளது; பெரும்பான்மை என்பது கவர்னர் மாளிகையில் அல்ல; சட்டமன்ற அவையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் வழங்கிய மக்கள் ஆணையை ஆளுநர் மதித்து, தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

பாஜக-விற்கு ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்தபோதிலும், அரசியல் அழுத்தம், திரைமறைவு ஏற்பாடுகள் அல்லது ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின் பினாமி ஆட்சி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தை ஆள முடியாது.
தமிழக மக்கள் தங்கள் தீர்ப்பை ஏற்கனவே வழங்கிவிட்டனர்; அதனை மீறுவதற்கான எத்தகைய முயற்சியும் ஏற்றுக்கொள்ளப்படாது” என்றார்.

மேலும், மக்களின் ஆணையைப் பாதுகாக்கவும், மறைமுகமான பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆட்சியிலிருந்து தமிழகத்தைக் காக்கவும், அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். ஜனநாயகமும் அரசியலமைப்புச் சட்டமும் வெல்ல வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : வி.சி.க.வுக்கு கடிதம் அனுப்பிய விஜய்.. வி.சி.க நிலைபாடு என்ன? ரவிக்குமார் பதில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com