பினராய் விஜயன் வாக்குகள் சரிவு.. கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி.. சப்தமில்லாமல் சாதித்த பா.ஜ.க!

Kerala Election 2026 : கேரளத்தில் முதல் முறையாக பா.ஜ.க 3 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்க வருகிறது.

Published on: May 5, 2026 at 1:24 pm

Updated on: May 5, 2026 at 10:43 pm

திருவனந்தபுரம், மே 5, 2026: பாஜக கேரளாவில் வரலாற்று முறையில் மூன்று இடங்களை வென்று, புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இதே நேரத்தில், இரண்டு முறை ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப் மீண்டும் ஆட்சிக்கு வர உள்ளது.

பாஜக வெற்றிகள்

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை கேரளத்தில், நேமம், சத்தன்னூர், காழகூட்டம் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, 2016-இல் ஒரே முறை நேமம் தொகுதியில் ஓ. ராஜகோபால் வென்றிருந்தார்; இப்போது மூன்று இடங்கள் வென்றது பாஜக வரலாற்றில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது.

பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள்

மாநிலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் வி. முரளீதரன் காழக்கத்தில் 51,923 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், பி.பி. கோபகுமார் சத்தன்னூரில் 44,429 வாக்குகள் பெற்று வென்றார். மேலும், ராஜீவ் சந்திரசேகர் நேமத்தில் 48,995 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், பாஜக கேரள மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், “நேமம், சத்தன்னூரில் மக்கள் காங்கிரஸ் மற்றும் இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தெளிவான பதில் அளித்துள்ளனர்“ என்றார்.

கேரளத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் அணி 140 இடங்களில் 102 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சிக்கு வர உள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தம்முடைய தர்மடம் தொகுதியை வென்றாலும், 2021-இல் இருந்ததை விட குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடதுசாரிகளின் இந்தத் தோல்வியால், 1977-க்கு பிறகு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் ஆட்சி இல்லாத நிலை உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : புதிய எம்.ஜி.ஆர். ஆக உருவெடுத்த விஜய்.. சட்டமன்ற தேர்தலில் இப்படி ஓர் சாதனையா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com