புதிய எம்.ஜி.ஆர். ஆக உருவெடுத்த விஜய்.. சட்டமன்ற தேர்தலில் இப்படி ஓர் சாதனையா?

Assembly Election 2026: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், எம்.ஜி.ஆர்.ரின் சாதனையை முறியடித்துள்ளார்.

Published on: May 5, 2026 at 12:46 pm

சென்னை, மே 5, 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்தத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட விஜய், 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளார்.

அவரது கட்சி தனிப்பெரும் கட்சியாக போட்டியிட்ட முதல் தேர்தலிலே வெற்றிப் பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க., இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் மு.க ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியிலேயே படுதோல்வி அடைந்துள்ளார்.

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் துறைமுகம் தொகுதியில் சேகர் பாபு ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தமட்டில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

எம்.ஜி.ஆர் சாதனை

மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) 108 இடங்களை வென்று, 33.52% வாக்குகளை பெற்றது. இது 1977-இல் எம்.ஜி.ஆர் பெற்ற வாக்கு சதவீதத்தை கூட மிஞ்சியது.
அந்த வகையில், 2026-இல் அரசியலில் எம்.ஜி.ஆர் போன்றே மக்கள் நம்பிக்கையை வென்று புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளார் விஜய். அவரது திரைப் பிம்பம், அரசியல் வெற்றிக்கான முன்னோட்டமாகவும், அடித்தளமாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 91 வயது முதியவர் மரணம்.. மகனுடன் தீக்குளிக்க முயன்ற வக்கீல்.. தூத்துக்குடியில் பரபரப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com