BTech online application : என்ஜினீயரிங் மற்றும் பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே5ஆம் தேதி தொடங்கயுள்ளது.
BTech online application : என்ஜினீயரிங் மற்றும் பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே5ஆம் தேதி தொடங்கயுள்ளது.

Published on: May 3, 2026 at 11:30 am
சென்னை, மே 3, 2026: தமிழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாணவர்கள் ஜூன் 2, 2026 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
இந்த விண்ணப்ப பதிவு மே 5, 2026ஆம் தேதி தொடங்கி, ஜூன் 2, 2026 அன்று நிறைவு பெறுகிறது. இதில், ஜூன் 10, 2026 வரை ஆவணங்கள் பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம்.
இதையடுத்து, ரேங்க் பட்டியல் வெளியீடு ஜூன் 25, 2026 அன்று வெளியிடப்படும். இதற்கான விண்ணப்ப இணையதளம் tneaonline.org ஆகும்.
சேர்க்கை முறைகள்
தமிழ்நாட்டில் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படாது. பிளஸ்-2 (பொது தேர்வு) இயற்பியல், இரசாயனவியல், கணிதம் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
தொடர்ந்து, அண்ணா பல்கலை, அரசு உதவியுடன் இயங்கும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் ஒப்படைக்கும் இடங்கள் அனைத்தும் ஒரே TNEA கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நீட் தேர்வு புதிய ஆடைக்கட்டுப்பாடுகள்.. என்னென்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com