தமிழ்நாட்டில் காங்கிரஸ் இனி ஆளுங்கட்சி.. கிரிஷ் சோடங்கர்!

Assembly Election 2026 : தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் காங்கிரஸ் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.

Published on: April 30, 2026 at 8:08 pm

Updated on: April 30, 2026 at 9:46 pm

புதுடெல்லி, ஏப்.30, 2026: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி குறித்து தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மே 4-ஆம் தேதி வெளியாக உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு, “தமிழகத்தில் இனி காங்கிரஸ் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில்தான் இருக்கும். அதிகாரமற்ற நிலையில் இருக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், நடுநிலையாக செயல்படும் காலம் முடிந்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் பிறகு கட்சியின் நிர்வாக அமைப்புகள் மாற்றப்படும் என்றும் கூறினார். அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் நேரடியாக போட்டியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஏற்கெனவே வென்ற இடங்களை தக்கவைத்ததோடு, புதிய தொகுதிகளை கைப்பற்றுவதற்காக தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, ஸ்டாலின் மீண்டும் முதல்வராகுவது உறுதி என அவர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸுக்கு புத்துயிர் கொடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. கிராம அளவிலான கமிட்டிகள் மற்றும் பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். இதற்கிடையில், அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் வலுவான போட்டியை தரத் திட்டமிட்டுள்ளோம். தேர்தல் முடிவுகள் பிறகு எங்கள் உரிமைகளை முறைப்படி கேட்டுப் பெறுவோம் என அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, ஆட்சியில் பங்கு என்ற அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தமிழகத்தில் தி.மு.க, கேரளத்தில் காங்கிரஸ்.. மல்லிகார்ஜுன் கார்கே பேட்டி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com