243 ரன் இலக்கு.. அசால்ட் காட்டிய ஹைதராபாத்.. கண்ணீர் விட்ட மும்பை!

IPL 2026: மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

Published on: April 30, 2026 at 5:45 pm

மும்பை, ஏப்.30, 2026: மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் புதன்கிழமை (ஏப்.29, 2026) நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடர்ந்து, 20 ஓவர்களில் 243/5 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரையன் ரிக்கில்டன் 55 பந்துகளில் சாகசமான 123 ரன்கள் அடித்து அசத்தினார். வில்ல் ஜாக்ஸ் 46 ரன்கள் பங்களித்தார்.

ஹைதராபாத் அணி வெற்றி

மும்பை அணி நிர்ணயித்த 244 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய ஹைதராபாத், 18.2 ஓவர்களில் 249/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். ஹெய்ன்ரிக் கிளாசன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், ஏ.எம். கஜான்ஃபர் மும்பை அணிக்காக 2 விக்கெட்டுகள் எடுத்தார். இந்நிலையில், இன்று, குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதையும் படிங்க : காமன்வெல்த் இளைஞர் பளுதூக்குதல்.. 4 தங்கம் வென்று இந்திய வீரர்கள் அசத்தல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மிரட்டிய ஷஃபாலி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியா! INDIA IN FINAL

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மிரட்டிய ஷஃபாலி.. வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com