Congress MP Sudha: “தீவிரவாத குற்றங்களில் தண்டனை பெற்றவர்களை வழக்கறிஞர்களாக அனுமதிக்கக் கூடாது” என காங்கிரஸ் எம்.பி சுதா தெரிவித்துள்ளார்.
Congress MP Sudha: “தீவிரவாத குற்றங்களில் தண்டனை பெற்றவர்களை வழக்கறிஞர்களாக அனுமதிக்கக் கூடாது” என காங்கிரஸ் எம்.பி சுதா தெரிவித்துள்ளார்.

Published on: April 30, 2026 at 1:33 pm
சென்னை, ஏப்.30, 2026: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ஆர். சுதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சட்டப்படி எந்த விதிமீறலும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
மயிலாடுதுறை தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆர். சுதா, பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டதை “நீதித்துறையின் கருப்பு நாள்” எனக் குறிப்பிட்டார். மேலும், அவர் ஜனாதிபதி, பிரதமர், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதி, உடனடியாக பதிவு ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதில், “தீவிரவாத குற்றங்களில் தண்டனை பெற்றவர்களை வழக்கறிஞர்களாக அனுமதிக்கக் கூடாது” என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி.. யார் இந்த அஸ்வத்தாமன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com