மேரேஜ் பண்ணிக்கலாமா? ரூ.9 கோடி மோசடி.. பிரபல நடிகை மீது வழக்கு!

Ashu Reddy: திருமண ஆசைக்காட்டி ரூ.9 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தெலுங்கு நடிகை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Published on: April 28, 2026 at 4:03 pm

ஹைதராபாத், ஏப்.28, 2026: திருமண ஆசை காட்டி ரூ.9.35 கோடி மோசடி செய்ததாக தெலுங்கு நடிகை ஆஷு ரெட்டி மீது ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ஷேக்​பெட்டையைச் சேர்ந்த சத்தியநாராயண மூர்த்தி அளித்த புகாரின்படி, அவரது மகன் தர்மேந்திரா லண்டனில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
2018-ம் ஆண்டு ஆஷு ரெட்டியுடன் பழகிய அவர், திருமண வாக்குறுதி அளித்து தர்மேந்திராவிடம் இருந்து ஐந்து கிலோ தங்கம், சொகுசு கார்கள், மேலும் ரூ.1.80 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை தனது பெயரில் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு ரூ.9.35 கோடி. மேலும், ஆஷு ரெட்டியின் சகோதரியும் ரூ.50 லட்சம் பெற்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் தர்மேந்திரா, தங்கம் மற்றும் பணத்தை திருப்பிக் கொடுக்க கேட்டபோது, ஆஷு ரெட்டி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹைதராபாத் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஆஷு ரெட்டி மறுத்து, தவறான தகவல்கள் பரப்பப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க : ரசிகர்களின் எதிர்பார்ப்பில், ‘பொல்லாத ஆசைகள்’ பாடல்.. எப்போது வெளியீடு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com