Strong Tremor Hits Manipur : மணிப்பூரில் 5.2 ரிக்டர் அளவுக் கோல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Strong Tremor Hits Manipur : மணிப்பூரில் 5.2 ரிக்டர் அளவுக் கோல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Published on: April 21, 2026 at 11:50 am
Updated on: April 21, 2026 at 11:59 am
புதுடெல்லி, ஏப்.21, 2026: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை 5:59 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, காம்ஜோங் மாவட்டத்தில் அமைந்திருந்தது. இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்) அதிகாரப்பூர்வ பதிவில், “நிலநடுக்கத்தின் அளவு: 5.2 என்றும் தேதி: 21/04/2026 05:59:33 என்றும் பதிவிடப்பட்டு இருந்தது.
மேலும், இது அட்சரேகை: 24.703 N; தீர்க்கரேகை: 94.415 E ஆகிய பகுதியில் 62 கி.மீ ஆழத்தில் மணிப்பூரில் காம்ஜோங் என்ற இடத்தில் ஏற்பட்டுள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, காம்ஜோங்கின் அண்டை மாவட்டமான உக்ருல், மாநிலத் தலைநகர் இம்பால் மற்றும் மேகாலயா மாநிலத்திலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன; எனினும், இதுவரை உயிரிழப்போ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை.
இதையும் படிங்க : மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் துர்கா படை.. ராஜ்நாத் சிங் அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com