Nayanthara New Film : சல்மான் கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தை யார் இயக்குகிறார் தெரியுமா?
Nayanthara New Film : சல்மான் கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தை யார் இயக்குகிறார் தெரியுமா?

Published on: April 21, 2026 at 12:14 pm
மும்பை, ஏப்.21, 2026: நடிகர் சல்மான் கான் ஜோடியாக நடிகை நயன்தாரா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
சமீபத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில், வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகவிருப்பதாகத் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்தார். இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதையும் படக்குழு உறுதி செய்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.
நடிகர் சல்மான் கான், இயக்குனர் வம்ஷி பைடிபள்ளி மற்றும் தில் ராஜு ஆகியோரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இதற்கிடையில், படக்குழுவினர் விரைவில் முழு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்படம், 2027-ஆம் ஆண்டில் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெல்ஜியம் 24H கார் ரேஸில் அஜித்குமார் அணி 2ஆம் இடம் பெற்று சாதனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com