Rahul Gandhi: பாரதிய ஜனதாவிடம் அ.தி.மு.க. சரணடைந்து விட்டது எனக் கூறிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் எனவும் கூறினார்.
Rahul Gandhi: பாரதிய ஜனதாவிடம் அ.தி.மு.க. சரணடைந்து விட்டது எனக் கூறிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் எனவும் கூறினார்.

Published on: April 20, 2026 at 9:54 pm
கன்னியாகுமரி, ஏப்.20, 2026: காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “திராவிடக் கொள்கையை வெறுக்கும் சக்திகள், தமிழ்நாட்டை ஆளவும் திட்டமிடுகின்றன; இந்த நேரத்தில், ஒவ்வொரு மாநிலமும் தனது தனித்துவமான குரலையும் தன்னாட்சியையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநில மக்களே தங்கள் மாநிலத்தை நிர்வகிக்க வேண்டும். ஆனால் பாஜக இத்தகைய சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை.
ஒரே மரபு, ஒரே மொழி, ஒரே வரலாறு’ என்பதையே அது நம்புகிறது” என்றார். மேலும், தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் எனக் கூறிய ராகுல் காந்தி, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை ஆளுமைக்கு உட்படுத்த முயன்றதாகவும்; அதற்குப் பிரதிபலனாக, அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வாயிலாகத் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்த மோடி முயன்றதாகவும்“ குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க :விஜய்- சங்கீதா ஆஜராக உத்தரவு.. குடும்ப நல நீதிமன்றம் அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com