கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு!

Dalit Student Death in Kerala : கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: April 13, 2026 at 5:39 pm

திருவனந்தபுரம், ஏப்.13, 2026: கேரளத்தில் 22 வயதான பட்டியலின மருத்துவ மாணவர் நிதின் ராஜ் ஆர். எல். மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உழமலக்கல் கிராமத்தைச் சேர்ந்த நிதின், கண்ணூர் அஞ்சரகண்டி பகுதியில் உள்ள கண்ணூர் டென்டல் கல்லூரியில் பி.டி.எஸ். முதல் ஆண்டு மாணவராக படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து விழுந்தார். இதையடுத்து, அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். எனினும், அவர் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தப் போக்கு காரணமாக, உயிரிழந்தார்.

குடும்பத்தின் குற்றச்சாட்டு

இந்நிலையில், கல்லூரி ஆசிரியர்கள் அவரை சாதி, நிறம், பெற்றோர் கூலி தொழிலாளர்கள் என்பதற்காக தொடர்ந்து அவமதித்ததாக நிதின் ராஜ் குடும்பம் கூறியுள்ளது. இதற்கிடையில், மரணத்தில் சூழ்ச்சி இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்ட நடவடிக்கை

ஆரம்பத்தில் போலீசார் இயற்கை அல்லாத மரணம் என வழக்கு பதிவு செய்தனர். பின்னர், தற்கொலைக்கு தூண்டுதல் குற்றச்சாட்டுகள் (பி.என்.எஸ் சட்டப் பிரிவு 108) சேர்க்கப்பட்டன.

அதேசமயம், பட்டியலின தலித் மாணவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கொளத்தூரில் கமல்ஹாசன் பரப்புரை.. விஜயின் பெரம்பூர் டார்கெட்.. எப்போது தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com