ஜனநாயகன் கசிவு காட்சிகளை பார்த்தாரா அமீர்? பரபரக்கும் வாட்ஸ்அப் பதிவு!

Jana Nayagan Leak : ஜனநாயகன் திரைப்படத்தின் ஆன்லைன் கசிவு காட்சிகளை அமீர் பார்த்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Published on: April 10, 2026 at 8:54 pm

சென்னை, ஏப்.10, 2026: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வெளியீட்டு சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால் இதுவரை படம் திரைக்கு வரவில்லை. ஜனவரி பொங்கல் வெளியீடாக படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், ஏப்ரல் மாதம் தொடங்கியும் படம் வெளியாகவில்லை.

இதற்கிடையில் படம் நேற்று ஆன்லைனில் கசிந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை யாரும் பார்க்க வேண்டாம் என்றும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் படக்குழு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமீர் வாட்ஸ்அப் பதிவு

இந்நிலையில் இயக்குனர் அமீரின் வாட்ஸ் அப் பதிவு வைரலாகி வருகிறது. அதில், “கசிந்திருக்கும் ஜனநாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள்தான் தீவிரவாதிகளா? இதுதான் தங்களின் அரசியலா? எப்போதுதான் மாறும் இந்த மனநிலை?” என அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜனநாயகன் முழுப் படம் இணையத்தில் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com