அப்பாவு vs பாலகிருஷ்ணன்.. ராதாபுரத்தில் கடும் போட்டி!

Assembly Election 2026 : திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் அப்பாவு, பா.ஜ.கவின் எஸ்.பி பாலகிருஷ்ணன் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Published on: April 9, 2026 at 4:50 pm

திருநெல்வேலி, ஏப்.9, 2026: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 1957ல் காங்கிரஸின் ஏ.வி தாமஸ் வென்றார். அதன்பின்னர், 1962 மற்றும் 1967 என இருமுறை சௌந்தரபாண்டியன் வென்றார்.

அதன் பின்னர், 1971ல் தி.மு.க.வின் கார்த்திசன், 1977ல் அ.தி.மு.க.வின் ஒய்.எஸ்.எம் யூசுப், காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸின் சார்பில் 1980ல் முத்துராமலிங்கம், 1984ல் குமரி அனந்தன் வென்றார்கள்.
1989 மற்றும் 1991ல் நல்லதம்பி வென்றார்கள். இவர்கள் இருவரும் காங்கிரஸை சேர்ந்தவர்கள். அடுத்து, 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அப்பாவு வென்றார்.

இவர் 2001ல் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். 2006ல் தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2011ல் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வின் மைக்கேல் ராயப்பன் வெற்றிப் பெற்றார்.
2016ல் இன்பத்துரையும் (அ.தி.மு.க), 2021ல் அப்பாவு (தி.மு.க.) வெற்றிப் பெற்றார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியை பொறுத்தமட்டில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 480 வாக்குகள் உள்ளன. இதில் அப்பாவு (திமுக), எஸ்.பி பாலகிருஷ்ணன் (பா.ஜ.க), கிரிஜா தாமரை பாண்டியன் (நாம் தமிழர்) மற்றும் சதீஷ் கிறிஸ்டோபர் (த.வெ.க) இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் அப்பாவு 82,331 வாக்குகள் பெற்றிருந்தார். அதேநேரம் இன்பத்துரை 76,406 வாக்குகள் பெற்றிருந்தார். இருவருக்கும் இடையே வாக்கு வங்கி வித்தியாசம் வெறும் 3.17 சதவீதம்தான். அதாவது 5,925 வாக்குகள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயித்தன.

மேலும், கடந்த தேர்தலில் இங்கு நாம் தமிழர் 10.39 சதவீத வாக்குகள் (19,371) பெற்று இருந்தது. இதனால் இத்தேர்தலில் தி.மு.க.வின் அப்பாவு மற்றும் எஸ்.பி பாலகிருஷ்ணன் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்ப்பதை விஜய் நிறுத்த வேண்டும்.. தமிழ்நாடு காங். கமிட்டி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com